வீட்டில் வாஷிங்மெஷின் இருக்கும்பட்சத்தில் பலரும், அதில் உள்ள ட்ரையரையும் பயன்படுத்துவார்கள். பொதுவாக ட்ரையர் என்பது வெளிநாட்டு வாழ் மக்களுக்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பமாகும்.
அதாவது கடும் குளிர், பனிப்பொழிவு நிலவும் நாட்களில் துணிகளைத் துவைத்து உலர்த்த முடியாத சூழ்நிலையில், இதுபோன்ற ட்ரையரைப் பயன்படுத்தி துணிகளை காய வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் நம் நாடு வெப்ப நாடு. வெப்பத்திற்கு எந்த குறைவும் இல்லை. மழைக் காலங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து காலத்திலும் வெப்பம் நிலவுகிறது.
அதிலும் தற்போது கோடை வெப்பம் தகிக்கிறது. இந்த சூழ்நிலையில், வாஷிங்மெஷினில் ட்ரையரைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.
இதனால் தேவையற்ற மின்சாரச் செலவைக் குறைப்பதோடு, சூரிய வெப்பத்தையும் பயன்படுத்திய திருப்தி நமக்குக் கிட்டும்.