வீட்டில் எடுத்த பொருள் எடுத்த இடத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் எப்போதும் அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
வீட்டை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றிக் கொண்டே இருப்பது உங்களுக்கும், வீட்டிற்கும் மிகவும் நல்லது.
குடி வந்த புதிதில் தோன்றிய ஒரு ஐடியாவை வைத்துக் கொண்டு டிவி, பீரோ, கட்டில் போன்றவற்றை வைத்து விட்டீர்கள். இப்போது அதையே பழக்கமாக்கிக் கொள்ளாமல், சிலவற்றை மட்டுமாவது அவ்வப்போது மாற்றிக் கொண்டிருங்கள்.
இதனால் ஒரு வித சலிப்பு, வெறுப்பு போன்றவை மாறும். ஏதோ புதிதாக ஒரு இடத்திற்கு வந்தது போன்ற தோற்றம் கிடைக்கும்.
குழந்தைகளுக்கும் இந்த விஷயம் அதிகம் பிடிக்கும். யாருக்குத் தெரியும்.. இப்படி மாற்றும் போது புது யோசனை பிறந்து அதன் மூலம் வீட்டில் அதிக இட வசதிக் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.