பொதுவாக ஒரு வீட்டில் எப்போதும் இருக்க வேண்டியவை என சில உண்டு. அவற்றை நீங்கள் வீட்டில் வைத்திருக்கிறீர்களா என்று பரிசோதித்து கொள்ளுங்கள்.
முதலில் சுத்தமாக காய்ச்சி வடிகட்டிய குடிநீர், காற்றோட்டம், சூரிய வெளிச்சம் ஒரு வீட்டிற்கு அவசியமானது.
அடுத்தது முதலுதவிப் பெட்டி, அதில் காய்ச்சலுக்கான மருந்துகள், குளுக்கோஸ் போன்றவை இருப்பது அவசியம்.
அவசரத்திற்கு சாப்பிட உதவும் வகையில் வீட்டில் பேரிட்சம் பழம் போன்ற உலர்ந்த பழங்கள் அல்லது தானியங்கள் இருந்தால் நல்லது.
வீட்டில் எப்போதும் பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு எப்போதும் மாத்திரை மருந்துகள் வாங்கி வைத்திருப்பது அவசியம்.