எதிலாவது மெழுகுக் கரை ஒட்டிக் கொண்டால் அதனை சுரண்டிக் கொண்டிருக்காதீர்கள். அந்தப் பொருளின் அருகே லேசாக வெப்பத்தைக் காட்டுங்கள். உடனே மெழுகு உருகி வெளியேறிவிடும்.
பூச் ஜாடிக்குள் எப்போதும் நீர் ஊற்றி பூக்களை வைத்திருக்க வேண்டிய சூழ்நிலையில், பூ ஜாடிக்குள் ஒரு கரித்துண்டைப் போட்டு வைத்தால் நல்லது.
எதிலாவது லிப்ஸ்டிக் கரை பட்டுவிட்டால் அதில் வாசலின் வைத்துத் துடைத்துவிட்டு பிறகு சோப்பு நீர் கொண்டு கழுவவும்.
கண்ணாடி பாத்திரங்களைக் கழுவ வினீகர் சிறந்த பொருளாக இருக்கும்.
இரண்டு ஸ்டாம்ப்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டால் அவற்றை சிறிது நேரம் ப்ரீஸரில் வைத்து பிறகு எடுத்தால் எளிதாக பிரிக்கலாம்.
அழுத்தமாக கறை படிந்த பாத்திரங்களை ப்ளீச்சிங் பவுடர் போட்ட நீரில் ஊற விட்டு பிறகு தேய்த்தால் எளிதாக இருக்கும்.