அடிக்கடி புழங்காத பாத்திரங்களைப் பயன்படுத்தி விட்டுத் துலக்கி வைக்கிறபோது மெல்லிய துணியால் ஈரம் போக துடைத்து வெயிலில் வைத்து எடுத்து வைத்தால் புள்ளிகள் விழாது.
தரையைப் பெருக்குகிற போது சற்றே நிமிர்ந்து சுவர்கள் இணையும் இடங்களிலும் ஒட்டடை அடித்தால் வலை கட்டிய சுவர்களைக் காணவே முடியாது. பளிச்சென்று இருக்கும்.
புகைப்படங்களை பிரேம் பண்ணாமல் லாமினேஷன் பண்ணிக் கொண்டால் கண்ணாடி உடைந்து விடுகிற அபாயம் இல்லை. தேவையான இடங்களில் அழகாக வைத்துக் கொள்ளவும் முடியும்.
காலியாகி விட்ட ஸ்கெட்ச் பென்களை சிறிய துண்டுகளாய்க் கட் செய்து நூலில் கோர்த்து வாயிலில் கட்டிவிட்டால், தோரணம் தயார் பண்ணலாம். பல வண்ணங்களில் அவை காற்றிலாடும் அழகே அழகு.
பழைய பித்தளை வெங்கல தம்ளர்கள், ஜாடிகள் ஆகியவற்றை பிராஸ்ஸோ கொண்டு மெருகு ஏற்றி பூச்சாடிகளாகப் பயன்படுத்தலாம்.