எலுமிச்சம் பழ ஜூஸ் எடுத்த பின், மூடிகளைத் தூர எறிந்து விடாதீர்கள்.
குக்கரில் தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சை தோல்களைப் போட்டு கொதிக்க வைத்தால் குக்கரின் அடிபாகம் புதுசு போல மின்னும்.
அந்த கொதிக்க வைத்த நீரையும் வீணாக்க வேண்டாம். அந்த நீரில் உங்கள் பாதங்களை சிறிது நேரம் வைத்தால் உங்கள் கால்களுக்கு புத்துணர்வு கிடைக்கும். கால் வெடிப்பு சரியாகும்.