கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமானால் அடிக்கடி குளிர்ந்த பாலில் நனைத்த பஞ்சை அல்லது உருளைக்கிழங்கு துண்டை அல்லது வெள்ளரி துண்டை அல்லது இளஞ் சூடான நீரில் நனைக்கப்பட்ட டீ பேகை கண்களின் மேல் சிறிது நேரம் வைக்கலாம்.
கண்களுக்குப் போதிய உறக்கம் தேவை. உறக்க குறைவதாலும் கருவளையங்கள் ஏற்படும்.
அதிக வேலைப்பளு. நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்வது. இதற்கு கண்களுக்கு அவ்வப்போது இதமளிக்கம் பயிற்சியும் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவுவதும், அடிக்கடி கண் பகுதியில் படும்படி தெளிப்பதும் நல்லது.
கிளாஸ் அணிவது வெறும் ஃபேஷன் என்று நினைத்து, கண்டதை அணிந்துவிட வேண்டாம். கண்ணுக்கே உலை வைத்துவிடக் கூடும்.
அதிகமாக டிவி பார்ப்பதைத் தவிர்க்கவும். தொடர்ந்து புத்தகங்கள் படிப்பது நல்லது. கண்ணுக்கு சிறந்த பயிற்சியாக அது அமையும்.