கணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்கள் உலர்ந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு விடுகிறது.
அதாவது, கணினியில் வேலை செய்யும்போது கண் இமைகள் இமைப்பது குறைந்து விடுகிறது. இதனால் கண் வரண்டு போகிறது. இதனைத் தவிர்க்க ஒரு மணிக்கொரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
அந்த சமயத்தில் கண்களை உள்ளங்கையின் அடிப்பாகத்தால் லேசாக அழுத்தி விட வேண்டும். மற்றும் பச்சை அல்லது நீல நிறத்தில் உள்ள பொருட்களை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த நிறங்கள் கண்களுக்கு இதமானவை.
2 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்களை சுழல விட வேண்டும். அவ்வப்போது கண் இமைக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அதிக நேரம் கணினியில் வேலை செய்ய வேண்டி வந்தால் அவ்வப்போது எழுந்து பச்சையான மரங்களைப் பார்த்துவிட்டு வந்து அமர்ந்து பணியாற்றலாம்.