Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆம்புலன்சில் இருப்பது, மருத்துவமனையில் இல்லாதது

Advertiesment
ஆம்புலன்சில் இருப்பது, மருத்துவமனையில் இல்லாதது
, திங்கள், 5 ஜனவரி 2009 (11:58 IST)
பிரசவ வலி வந்த பெண்ணுக்கு, பிரசவம் பார்க்க இங்கு வசதி இல்லை என்று கூறி 2 மருத்துவமனைகள் திருப்பி அனுப்பி அனுப்பிய நிலையில் மருத்துவ தொழில்நுட்ப ஊழியரே ஆம்புலன்சில் பிரசவம் பார்த்துள்ளார்.

கடலூர் மாவட்டம், கீழக்கரை கிராமத்தைச் சேர்ந்த கண்ணகிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரை உடனடியாக குமராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர் அவரது உறவினர்கள்.

ஆனால், அங்கிருந்த செவிலியர்கள், வயிற்றில் குழந்தை மாறி கிடக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கான வசதி இங்கு இல்லை என்று கூறிவிட்டனர்.

உடனடியாக அரசு ஆம்புலஸ் வரவைத்து அதில், கண்ணகியை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், அங்கு கண்ணகியை பரிசோதித்த மருத்துவர், இது மிகவும் சிக்கலான பிரசவம். உடனே அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே கண்ணகிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வரை தாங்காது என்ற நிலையில், ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்யப்பட்டது.

பெண் ஊழியர்கள் யாரும் இல்லாததால் ஆம்புலன்சில் வந்த மருத்துவ தொழில் நுட்ப அலுவலர் ரவிக்குமார், கண்ணகியின் கணவரின் உதவியுடன் பிரசவம் பார்த்தார்.

சிறிது நேரத்தில் கண்ணகிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மகப்பேறு மருத்துவமனைகளில் இல்லாத வசதி ஆம்புலன்சில் இருந்ததா? மருத்துவர்கள் அந்த பெண்ணின் நிலையை ஏன் உணரவில்லை? அப்படி மருத்துவமனைகளில் சில வசதிகள் இல்லாத நிலை இன்னும் இருப்பது ஏன்? ஆரம்ப சுகாதார மையங்களை முழுமையான சுகாதார மையங்களாக மாற்ற வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil