Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயிரை மேயும் வேலிகள்

Advertiesment
பயிரை மேயும் வேலிகள்
, வெள்ளி, 2 ஜனவரி 2009 (16:59 IST)
வேலியே பயிரை மேய்ந்தது என்ற பழமொழியை நினைவூட்டும் வகையில் ப்ரெளனி என்ற இடத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் கூறலாம்.

ராஜ்தானி விரைவு ரயிலில் ஒரேப் பெட்டியில் சென்று கொண்டிருந்த இரண்டு ராணுவ வீரர்கள், சக பெண் பயணியிடம் தவறான நடந்து கொள்ள முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.

குவஹாத்தியில் இருந்து டெல்லி செல்லும் ராஜ்தானி விரைவு ரயிலில் குடி போதையில் ஏறிய இரண்டு ராணுவ வீரர்களும், அவர்கள் சென்ற அதேப் பெட்டியில் பயணம் செய்த ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர்.

இவர்களது செயலால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அந்த பெண் உடனடியாக அடுத்து வந்த கட்டிஹார் ரயில் நிலையத்தில் இறங்கி ரயில்வே காவல்துறையிடம் புகார் செய்தார்.

இந்த புகாரினை அடுத்து இந்த இரண்டு ராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்று ரயில்வே காவல்துறை அதிகாரி கூறினார்.

இவர்களது உயர் அதிகாரிகளுக்கும், இவர்கள் கைது செய்யப்பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil