Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்காவின் கறுப்பின காந்தி

Advertiesment
அமெரிக்காவின் கறுப்பின காந்தி
, திங்கள், 1 டிசம்பர் 2008 (11:56 IST)
வெள்ளையர்களால் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதால் நமது இந்திய நாட்டிற்கு ஒரு மகாத்மா காந்தி கிடைத்தார்.

அதுபோல அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிராக நடந்து வந்த இனவெறியை, எதிர்த்த கறுப்பு மங்கை ரோசா பார்க்ஸ் மூலமாக அங்கு கறுப்பின மக்கள் மீதான ஒடுக்கலுக்கு முடிவு கட்டப்பட்டது.

அதற்கு தூண்டுகோலாக இருந்த ஒரு சம்பவத்தை தான் நாம் இப்போது நினைவு கூற இருக்கிறோம்.

அதாவது அமெரிக்காவின் இனவெறிச் சட்டத்தில், பேருந்தில் வெள்ளையர் எவரேனும் உட்கார இருக்கை இல்லாமல் நிற்க நேர்ந்தால், உட்கார்ந்திருக்கும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் எழுந்து நின்று இருக்கையை வெள்ளையருக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்த சட்டம்.

அதுவே அங்கு நடைமுறையாகவும் இருந்தது. ஒரு நாள் அமெரிக்காவின் அலபாபாமா மாநிலத்தின் மாண்ட்கோமரியில், பேருந்தில் உட்கார்ந்திருந்த இருக்கையை நின்று கொண்டு வந்த வெள்ளையருக்கு விட்டுக் கொடுக்க மறுத்த கறுப்பின மங்கை ரோசா பார்க்ஸ் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது தொடரப்பட்ட வழக்கில், அவர் ரூ.3,500 அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து ரோசா பர்க்ஸ் மேல்முறையீடு செய்தார்.

ரோசா பர்க்சுக்கு ஆதரவாக அலபாமாவைச் சேர்ந்த 40 ஆயிரம் கறுப்பின மக்கள் பேருந்துகளில் செல்வதையேப் புறக்கணித்து அமைதியான வகையில் போராட்டம் செய்தனர்.

பேராட்டத்தைத் தொடர, கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் அறைகூவல் விடுத்தார்.

சுமார் 381 நாட்கள் (ஓராண்டுக்கும் மேலாக) நடத்தப்பட்ட இந்த பேருந்து புறக்கணிப்பினால் போக்குவரத்துத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது.

பேருந்துகளில் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இன ஒடுக்கலுக்கு முடிவு கட்டுமாறு அமெரிக்க உச்ச நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பளித்தது.

வேலையில் இருந்து நீக்கப்பட்டது மட்டுமல்லாமல் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளான ரோசா பார்க்ஸ் கறுப்பின மக்களின் மகாத்மாவாக திகழ்ந்தார்.

அவர் கைது செய்யப்பட்ட தினம் 1955ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி.

குனிய குனிய குட்டிக் கொண்டே இருப்பார்கள் என்ன பழமொழியை அறிந்து, நிமிர்ந்து நின்ற ரோசா பார்க்ஸ் பெண் உலகின் காந்தி.

Share this Story:

Follow Webdunia tamil