Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கையில் பெண்களுக்கு எதிரான அநீதிகள்

Advertiesment
இலங்கையில் பெண்களுக்கு எதிரான அநீதிகள்
, திங்கள், 1 டிசம்பர் 2008 (11:38 IST)
இலங்கையில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் ஆண்களுக்கு நிகராகக் கல்வியும், சுகாதார வசதியும் பெண்களுக்கு அளிக்கப்படுகிறது. இலங்கையில் வாழும் பெண்கள் நன்கு கல்வியறிவு பெற்றவர்களாகவே உள்ளனர். எனினும் அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி மட்டும் தவிர்க்க முடியாததாக உள்ளது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் ஒரு மாதத்தில் மட்டும் பெண்களுக்கு எதிரான அநீதி தொடர்பான வழக்குகள் 8,000 முதல் 10,000 வரையில் பதிவு செய்யப்படுகின்றன.

ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே போர் நடக்கும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள முகாம்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் தஞ்சம் அடைந்துள்ள பெண்கள் அதிகமான பிரச்சினையை சந்திக்க வேண்டியுள்ளதாகவும் அந்த ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது.

இலங்கையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளைத் தடுக்கவும், அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வகை செய்யும் பல சட்டங்கள் உள்ளன. ஆனால் இந்த சட்டங்களால் பெண்களை பாதுகாக்கவும், அவர்களது வாழ்க்கையை உறுதி செய்யவும் இயலாமல் போய் உள்ளது என்று இலங்கைக்கான ஐ.நாவின் பிரதிநிதி கிறிஸ்டியன் சென் குற்றம்சாட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil