Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

க‌ற்ப‌‌ழி‌த்து கொலை: 16 ஆ‌ண்டு‌க்கு‌ப் ‌பிறகு கைது நடவடி‌க்கை

Advertiesment
கற்பழிப்பு அபயா கன்னியாஸ்திரி
கேரளாவில் கட‌ந்த 1992ஆ‌ம் ஆ‌ண்டு கன்னியாஸ்திரி அபயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில், 16 ஆ‌ண்டுக‌ளு‌க்கு‌ப் ‌பிறகு நே‌ற்று‌த்தா‌ன் 2 பாதிரியார்கள் கைது செய்யப்பட்டு‌ள்ளனர்.

1992‌ல் கு‌ற்ற‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டவ‌ர்க‌ள் 2008‌‌ம் ஆ‌ண்டு இறு‌தி‌யி‌ல் கைது ச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இந்த வழக்கு சி.பி.ஐ. காவ‌ல்துறை‌க்கு மா‌ற்ற‌ப்ப‌ட்ட ‌பி‌ன்னரே இ‌ந்த கைது நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் நகரில் உள்ள பயஸ் கான்வென்ட் பள்ளிக்கூட விடுதியில் கன்னியாஸ்திரி அபயா (வயது16) தங்கி இருந்தார். 1992-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி அவர் விடுதியில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார்.

இது பற்றி ‌விசாரணை நட‌த்‌திய கவா‌ல்துறை‌யின‌ர், இது ஒரு தற்கொலை என்று வழக்கு பதிவு செய்தனர். என்றாலும், இதுபற்றி சி.பி.ஐ. காவ‌ல்துறை‌ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 2003-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி சி.பி.ஐ. காவ‌ல்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. காவ‌ல்துறை‌யின‌ர், அபயா‌வி‌ன் மரண‌ம் கு‌றி‌த்து ‌தீ‌விர ‌விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை‌யி‌ல், கன்னியாஸ்திரி அபயா, கற்பழித்து கொல்லப்பட்டு, பிணமாக கிணற்றில் வீசப்பட்டது உறுதிப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாதிரியார்கள் தாமஸ் எம்.கொட்டூர், ஜோஸ் போத்ரிக்காயல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பல்வேறு மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும் அதே பள்ளிக்கூடத்தில் தங்கி பணியாற்றிய ஒரு கன்னியாஸ்திரியும் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் ஸெபி.

கைது செ‌ய்ய‌ப்‌ப‌ட்ட மூவரு‌ம் எர்ணாகுளம் தலைமை கு‌ற்ற‌விய‌ல் நடுவ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நே‌ர்‌நிறு‌த்த‌ப்ப‌ட்டன‌ர். ‌பி‌ன்ன‌ர் ‌நீ‌திம‌ன்ற உத்தரவு படி ‌சிறை‌க் காவலில் வைக்கப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil