கலகலப்பாகச் சிரித்துப் பேசுவதுடன் மற்றவர்களையும் சிரிக்க வைப்பீர்கள். உண்மைக்குப் புறம்பாக எதையும் செய்ய விரும்பமாட்டீர்கள். உங்கள் ராசிக்குள் சுக்ரன் பிரகாசமாக அமர்ந்திருக்க 6ஆம் வீட்டில் சனியும், 11ஆம் வீட்டில் ராகுவும், வலுப்பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் புதிய திட்டங்களை தீட்டுவீர்கள், புதிய பாதையில் பயணிப்பீர்கள். உங்களின் ராசிக்கு 5வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் உங்களின் சாதனைப் பட்டியல் நீளும். 06. 12. 2008 முதல் உங்கள் ராசி நாதன் குரு பகவான் லாப வீட்டில் அமர்வதால் திடீர் அதிர்ஷ்டமும் வசதி, வாய்ப்புகளும் பெருகும்.
இந்த சர்வதாரி வருடம் உங்களை பல வகைகளிலும் விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன் சொத்து, சுகங்களை அளிப்பதாகவும் அமையும். இனிமையான பேச்சால் இழுபறியான காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அவர்களின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்துசேரும். உங்கள் மகனுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து வரன் அமையும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள்.
ஆனி மாதத்தில் புது முயற்சிகள் வெற்றியடையும். உங்களை குறை கூறியவர்களெல்லாம் இனி உங்களின் புகழாரம் பாடுவார்கள். சொத்து விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்களுக்கு அதிரடியான தீர்வு காண்பீர்கள். மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். ஆடி மாதத்தில் குடும்பத்தில் அதிருப்தி, கணவன் -மனைவிக்குள் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்துபோகும். பிள்ளைகளால் குழப்பம் என வந்துபோகும். வாகனத்தை கொஞ்சம் கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும். டென்சன், அரசு விஷயங்களில் தடுமாற்றம் வந்துபோகும். திறமைகள் வெளிப்படும். கல்வியாளர்கள், ஆன்மீகவாதிகளின் நட்பு கிடைக்கும்.
ஆவணி மாதத்தில் நீண்டகால ஆசைகள் பூர்த்தியாகும். வி. ஐ. பிகளின் அறிமுகம் கிடைக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். சேமிப்பீர்கள். புது வீடு, மனை, சொத்து வாங்குவீர்கள். வரவேண்டிய பணம் வந்துசேரும். புரட்டாசி மாதத்தில் இரத்த அழுத்தம், முன்கோபம் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். ஐப்பசி மாதத்தில் தந்தை, உடன்பிறந்தவர்களுடன் கருத்துமோதல்கள் வெடிக்கும். கன்னிப்பெண்கள் தடைபட்ட கல்வியை தொடர்வார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்.
கார்த்திகை, மார்கழி மாதங்களில் அதிரடியான மாற்றங்கள் நிகழும். பாதியிலேயே நின்றுபோன பல வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். 06. 12. 08 முதல் குரு லாப வீட்டிற்கு வருவதால் எதிலும் வெற்றியே கிட்டும். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வேற்று மதத்தினர் மற்றும் வெளிநாட்டினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். மாணவர்களே! எண்ணங்கள் பூர்த்தியாகும். வகுப்பறையில் அமைதி காப்பதுடன், படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். போட்டியாளர்களூக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக செயல்படுவீர்கள். தை மாதத்தில் புது ஒப்பந்தங்களை எடுப்பீர்கள். கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும். நம்பிக்கைக் குறியவர்களிடம் ஆலோசித்து கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களின் தொந்தரவு விலகும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும். உயரதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். சக ஊழியர்கள் இனி மதிப்பார்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவியுயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. கணினி துறையினர்களுக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
பரிகாரம் :
சிதம்பரம் அருகிலுள்ள புவனகிரியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் பகவான் ஸ்ரீராகவேந்திரரை உத்திரட்டாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். பசுவிற்கு பழம் கொடுங்கள். லட்சியங்கள் நிறைவேறும்.