இதற்கிடையே ம.தி.மு.க. மிகவும் உறுதியாகக் கேட்கும் காஞ்சி தொகுதியை தருவதற்கு அ.இ.அ.தி.மு.க. தலைமை தயங்குவதற்கான காரணம் குறித்து சுவையான தகவல் கிடைத்துள்ளது.
தி.மு.க.வில் இருந்து அச்சரபாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்று தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சராகவும் இருந்த டாக்டர் இராமகிருஷ்ணன் தற்போது அ.இ.அ.தி.மு.க.வில் உள்ளார்.
இவரை காஞ்சிபுரம் தொகுதியில் நிறுத்துவதற்கு போயஸ் தோட்டத்துத் தோழி குரூப் பேரம் முடித்துவிட்டராம். ஆனால் இதனை ஜெயலலிதாவிற்குத் தெரிவிக்காமல், அங்கு போட்டியிட முக்கிய ஆள் ஒருவர் உள்ளார் என்று மட்டும் அந்த குரூப் கூறியுள்ளதாம்.
இதுதான் காஞ்சி பிரச்சனையாவதற்கு காரணமாம்.