சொ(கொ)ல்றாங்க...
"தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும். அத்துடன், பரம ஏழைகளுக்கு ரூ.2,000, ஏழைகளுக்கு ரூ. 1,500, வறுமைக் கோட்டிற்கு மேலேயுள்ளவர்களுக்கு ரூ.1,000 உதவித் தொகை மாதந்தோறும் வழங்கப்படும்."
- சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை.
***
"அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து போட்டியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடருவேன்."
-அறிக்கை ஒன்றில் நடிகர் மன்சூரலிகான்