நாம் தினமும் உண்ணும் உணவில் மற்றும் பழங்களில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
அதில் ஒரு சிலவற்றை இங்கு தருகிறோம்.
வாழைப்பழத்தில் 20 வகைச் சத்துகள் உள்ளன.
இளநீரில் குளுகோஸ், வைட்டமின். பி, கார்போ ஹைட்ரேட், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.
கரும்புச் சாறில் உள்ள சத்து கால்சியம் ஆகும்.
தேனில் இரும்புச் சத்து, கார்போ ஹைட்ரேட், குளுகோஸ் ஆகிய சத்துகள் உள்ளன.
மலை வாழைப்பழத்தில் செரடோனியம், கொழுப்பு, வைட்டமின் - இ ஆகிய சத்துகள் உள்ளன.
திராட்சையில் நீர்ச்சத்து, மாவுச்சத்து, புரதச் சத்து தாதுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் - சி, இரும்புச் சத்து, பொட்டாசியம் ஆகியவை உள்ளன.