Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கண்புரை நோய் சிகிச்சையில் புதிய திருப்பம்!

கண்புரை நோய் சிகிச்சையில் புதிய திருப்பம்!
, வியாழன், 7 மார்ச் 2013 (19:09 IST)
FILE
கண்புரை நோய் என்பது 40 வயதுக்கு மேல் தவிர்க்க முடியாத ஒரு நோயாக இருந்து வருகிறது. இதற்கு அறுவை சிகிச்சை செய்து செயற்கை லென்சை வைத்து குணப்படுத்துகின்றனர். ஆன்னால் இந்த நடைமுறையே தேவையில்லாத ஒரு புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காடராக்ட் ஆபரேஷனில் பயன்படுத்தப்படும் செயற்கை லென்ஸ்களின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும் கண் வடிவம் சம்பந்தப்பட்ட புதிஅ புதிய கண்டுபிடிப்பை திருப்பு முனை கண்டுபிடிப்பு என்று லண்டன் கிங்ஸ்டன் பல்கலை மருத்துவ ஆராய்ச்சிக் குழு கோருகிறது.

கண்ணில் உள்ள லென்சில் புரோட்டீன்கள் எவ்வாறு வினியோகிக்கப்பட்டுள்ளது என்பதைக் கொண்டு கண்புரை நோய்க்கு சிறந்த சிகிச்சை அளிக்க முடியும் என்று இவர்கள் கருதுகின்றனர்.

கண்களில் இயற்கையாக உள்ள லென்சை ஒரு போதும் செயற்கை லென்ஸ்கள் மாற்றீடு செய்ய முடியாஅது. தற்போது இந்த ஆராய்ச்சியின் பயனால் மனிதனால் தயாரிக்கப்படும் லென்ஸ்களின் தரத்தை நன்றாக உயர்த்த முடியும் என்று இந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கண்புரை நோய் எந்த வயதிலும் ஏற்படலாம் என்றாலும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு அதிகம் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. புகைப்பிடித்தல் மற்றும் புற ஊதாக்கதிர் வீச்சின் தாக்கமே கண்புரை ஏற்படுவதற்குக் காரணம்.

இதற்கு பொதுவாக பாதிக்கப்பட்ட இயற்கையான கண் லென்ஸிற்குப் பதிலாக செயற்கை லென்சை பொருத்துவதாகவே இருந்து வருகிறது.

கண்ணில் இயற்கையாக உள்ள லென்சில் புரோட்டீன்கள் வினியோகிக்கப்பட்டுள்ள விதம் கண்பார்வை ஏற்ற இறக்க வாட்டத்தினை முன்னைவிட இப்போது மிகவும் ஸ்மூத்தாக மேம்பாடு அடையச் செய்ய முடியும் என்று ஆராய்ச்சியின் தலைவர் பேராசிரியர் பாராபாரா பெர்சியோனெக் கூறுகிறார்.

ஒளியின் வேகத்திற்கு சற்று நெருக்கமாக எலெக்ட்ரான்களை விசைப்படுத்தி க்ஷ்-ரே கதிர்களை உருவாகும் மூன்றாம் தலைமுறை சின்க்ரோடான் துறையில் வல்லுனரான இவர் இந்த க்ஷ்-ரேக்கள் உடலின் உட்பகுதிகளையும், மென் திசுக்களையும் மற்ற கதிர்வீச்சு முறையைவிட மிகவும் சிறப்பாக ஊடுருவும் தன்மை கொண்டது என்கிறார்.

இதனால் உலோகம் முதல் பாக்டீரியா வரை எதையும் ஆழமாக உற்றுநோக்க முடியும் என்கிறார் இவர்.

இந்த முறை இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது இது முழுப்பயனுக்கு வர எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்பது தெரியவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil