Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வரும் முன் காப்போம் இலவச மருத்துவ முகாம்

வரும் முன் காப்போம் இலவச மருத்துவ முகாம்
, வெள்ளி, 19 ஜூன் 2009 (12:20 IST)
சென்னை மாநகராட்சி பொது சுகாதார துறை சார்பில் 10 மண்டலங்களில் வரும் முன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நேற்று தொடங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் பெரியமேடு ஸ்டிங்கர்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வருமுன் காப்போம் சிறப்பு முகாமினை மேயர் மா.சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அ‌ப்போது அவ‌ர் பே‌சியதாவது, சென்னை மாநகரில் கடந்த ஆண்டு 40 வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பொதுமக்கள் பயன் அடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஏழை, எளிய மக்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு நோய்நெடியின்றி வாழவேண்டும் என்பதாகும். தனியார் மருத்துவமனைகளில் அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளதால், தமிழக அரசு வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் பயன்பெற நடத்தி வருகின்றது.

சென்னை மாநகரில் 100 மருத்துவ முகாம்கள் மண்டலம் வீதம் நடத்த திட்டமிட்டு, மொத்தம் இந்த ஆண்டு 5 லட்சம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 1000 வருமுன் காப்போம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

ஒவ்வொரு முகாமிலும் இரத்த வகை கண்டறிதல், இ.சி.ஜி., புற்றுநோய் கண்டறிதல், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், மலேரியா நோய், காசநோய் ஆகியவற்றிற்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை, சனிக்கிழமைகளில் இந்த முகாம்கள் நடைபெறும். மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும்.

சென்னையில் பூண்டி தங்கம்மாள் ஆரம்ப சுகாதார நிலையம், பேசின் பிரிட்ஜ் ஆரம்ப சுகாதார நிலையம், கே.பி.பார்க் மாநகர ஆரம்ப சுகாதார நிலையம், செம்பியம் ஆரம்ப சுகாதார நிலையம், ஆசாத் நகர் ஆரம்ப சுகாதார நிலையம், சிந்தாதரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், சிங்கர்ரோடு ஆரம்ப சுகாதார நிலையம், நல்லன் குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம், கிண்டி மேற்கு ஆரம்ப சுகாதார நிலையம், ராஜா அண்ணாமலைபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் இந்த மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு பயன் அடையலாம் எ‌ன்று மேயர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil