பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களில் புரோட்டீன் சத்து பற்றி அறியவும், பாலில் நச்சுத் தன்மை உள்ளதா, இல்லையா? என்பதை அறிந்து கொள்ளவும் சீனாவின் வேளாண் அமைச்சகம் புதிய சோதனை முறையை கண்டறிந்துள்ளது.
மிலமைன் போன்ற நச்சுத் தன்மை கொண்ட இரசாயனப் பொருட்கள் ஏதேனும் பாலில் கல்ந்துள்ளதா? என்பதை அறிய இந்த சோதனை முறை உதவுகிறது.
புரோட்டீன் சத்தினை அறிந்து கொள்வதற்கான இந்த சோதனையில், புரோட்டீன் வெளியாகி விடும் என்பதால், நச்சுத்தன்மை பற்றி மட்டும் அறிந்து கொள்ளவே புதிய முறை உதவும் என்று சீனா வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.
சீனா முழுவதும் உள்ள உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் பால் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இந்த புதிய முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த முறை மூலம் மிலமைன் மற்றும் நைட்ரஜன் கொண்ட நச்சுப் பொருட்கள் தனியே பிரித்தெடுக்கப்படும் என்பதால் இந்த முறை பரிந்துரைக்கப்படுவதாக சீன உணவு பரிசோதனை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.