தகவல் தொழில்நுட்பத் துறையும், தொலைத்தொடர்புத் துறையும் வேகமாக வளர்ச்சியடைந்து பல்கிப் பெருகி விட்ட இக்காலத்தில் செல்போன் உபயோகிக்காதவர்களே இல்லை எனலாம்.
ஆண்களைப் பொருத்தவரை செல்போன்களை இடுப்பு பெல்டில் அணியும் கவரிலோ அல்லது பேண்ட்-சட்டை பாக்கெட்டிலோ செல்போன்களை வைத்துக் கொள்கிறார்கள்.
சிலர் செல்போன்களை எடுக்காமல் காதில் ஹியரிங் ஹெட் கருவியைப் பொருத்திக் கொண்டு மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பவர்களையும் பார்க்கிறோம்.
பொதுவாக ஆண்கால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 மணி நேரம் வரை செல்போனில் பேசுகிறார்கள். பாக்கெட்டில் வைத்தபடியே செல்போனில் பேசுவதால், ஆண்மைக்குறைவு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
நல்ல உடல் நலத்துடன் கூடிய ஆரோக்கியமான ஆண்கள் 23 பேரிடமும், ஆண்மைக்குறைவு பிரச்சினை இருப்பவர்கள் 9 பேரிடமும் உயிரணுக்கள் சோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த விந்தணுக்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
உயிரணுக்களை செல்போன்களில் இருந்து வரக்கூடிய 850 மெகாஹெர்ட்ஸ் ரேடியேஷனுக்கு உட்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில், செல்போன் அதிர்வலைகளால் உயிரணுக்கள் பாதிப்புக்குள்ளாவது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்த ஆய்வை நடத்திய அசோக் அகர்வால் தெரிவித்துள்ளார்.
உயிரணுக்கள் நகரும் தன்மை, அவற்றின் வீரியத் திறன், மூலக்கூறு மாற்றம் போன்றவை பற்றியும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 6 சதவீதம் அளவுக்கு பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எனவே ஆண்களே உஷார் ! செல்போன்களை எடுத்து காதில் வைத்துப் பேசுங்கள். ஹியரிங் போன்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கப் பாருங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்!!