நாம் உணவு சாப்பிடுவதற்கு முன்னரும், சாப்பிட்டு முடிந்த பிறகும், உணவினை கையாள்தல் மற்றும் சமைக்கும் போதும் கைகழுவும் பழக்கம் மிகவும் அவசியம்.
இதுபற்றி டெட்டால் ஆதரவு பெற்ற "குளோபல் ஹைஜீன் கவுன்சில்' என்ற அமைப்பு கூறுகையில், பொதுவாக வீட்டில் உள்ள 78 விழுக்காடு மேற்பரப்பு கிருமிகள் தாக்கக்கூடிய வகையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு சமையலறை உள்பட வீட்டில் நோய்த் தொற்று ஏற்படுவது குறித்து ஆய்வு நடத்தி இதனைத் தெரிவித்துள்ளது.
கிருமி பாதிப்புக்கு சமையல் அறையில் பயன்படுத்தப்படும் அசுத்தமான துணிகளும் காரணம் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
சமையல் செய்யும் போது கைகளை அவ்வப்போது கழுவுவதன் மூலம் கிருமிகளால் ஏற்படும் வயிற்றுப் போக்கு பாதிப்புகளை பாதியளவுக்குக் குறைக்க முடியும்.
இருமல் - சளி போன்ற சுவாசப் பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை 16 விழுக்காடு அளவு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இருமிய பிறகோ அல்லது தும்மிய பிறகோ 50 சதவீத இந்தியர்கள் கைகளைக் கழுவுவதில்லை. இதனால் ஒருவரிடமிருந்து கிருமி மற்றவருக்கு மிகவும் அதிகமாகப் பரவுகிறது.