வாகை மரத்தின் பலன்கள் பல உள்ளன. அதனைக் கொண்டு செய்யும் கை வைத்தியங்கள் பற்றி அறியலாம்.
வாகை இலையை அரைத்து கண் இமைகளின் மீது வைத்து கட்டி வர, கண் சிவப்பு, கண் எரிச்சல் குணமாகும்.
வாகைப் பட்டையை பொடி செய்து அரை கிராம் முதல் ஒரு கிராம் அளவு வரை வெண்ணெயில் கலந்து உட்கொண்டு வர உள்மூலம், ரத்த மூலம் குணமாகும்.
வாகை மரப்பட்டையை தூளாக்கி மோரில் கலந்து கொடுத்து வர பெருங்கழிச்சல் குணமாகும்.
வாகை மரத்தின் விதையில் இருந்து பெறப்படுகின்ற எண்ணெய், குஷ்ட நோய் புண்களை குணமாக்கும் தன்மை கொண்டது.
அடிபட்ட காயத்தின் மீது வாகை மரப்பட்டையை பொடித்து தூவ விரைவில் காயம் ஆறும்.