Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோடையை சமாளிக்க தினமும் 5 தக்காளி

Advertiesment
கோடையை சமாளிக்க தினமும் 5 தக்காளி
, செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (16:23 IST)
தினமும் 5 தக்காளிகளை உட்கொண்டால் சூரிய வெப்பத்தைத் தாங்கும் சக்தியை பெறுவீர்கள் என்கிறது ஓர் ஆய்வு.

தக்காளியுடன் பழச்சாறும் சூரிய வெப்பக் கதிர்களில் இருந்து பாதுகாக்கும் சக்தியை உங்கள் உடலுக்கு அளிக்கிறது.

webdunia photoWD
நியூகாஸ்டல் பல்கலை மற்றும் மான்செஸ்டர் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய புதிய ஆய்வி‌ன் மூல‌ம், நமது உணவில் தினமும் தக்காளியை அதிக அளவில் பயன்படுத்தும்போது, சூரிய வெப்பத்தைத் தாங்கும் சக்தியை நாம் பெறுகிறோம் என்று தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

சூரிய ஒளிக் கதிர்களில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் தோளில் இருக்கும் செ‌ல்க‌ள் பாதிக்கி‌ன்றன. இதனை தக்காளியில் இருக்கும் ஆண்டியோக்சிடென்ட் எனப்படும் ஐகோபென்கள் தடுத்து நிறுத்துகின்றன.

5 தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய உடன் அதிக அளவில் (விற்கும் விலைக்கு இது சாத்தியம் இல்லைதான்) தக்காளியை உண்பதும் பிரச்சினையாகிவிடும். எனவே உங்களது அன்றாட உணவில் போதுமான அளவு தக்காளி சேர்த்துக் கொ‌ள்ள‌ப்ப‌ட்டா‌ல் த‌னியாக இத‌ற்கென எ‌ந்த முய‌ற்‌சியு‌ம் எடு‌க்க வே‌ண்டா‌ம்.

மேலும், அ‌ன்றாட உ‌ண‌வி‌ல் த‌க்கா‌ளி இட‌ம்பெறாதப‌ட்ச‌த்‌தி‌ல், தக்காளிச் சாறு செய்து உண்பதும், தக்காளியை ரசமாக வைத்து சாப்பிடுவதும் சிறந்தது.

மேலும், தக்காளியை தோல் நீக்கி வேகவைத்து அந்த சாற்றில் மிளகுத் தூள், உப்பு கலந்து தக்காளி சூப் செய்தும் அருந்தலாம்.

Share this Story:

Follow Webdunia tamil