பொதுவாக மனித உடலில் வியர்க்காத இடம் என்று கேட்டால் அனைவரும் உதடு என்பார்கள். ஆனால் விஞ்ஞானிகளிடம் கேட்டால், அதில் உண்மையில்லை. உடலில் எங்கெல்லாம் சருமம் இருக்கிறதோ அங்கெல்லாம் வியர்வை சுரப்பிகளும் இருக்கின்றன என்று உறுதியாகக் கூறுகின்றனர்.
வியர்வை சுரப்பிகள் அதிகம் உள்ள இடங்களில் வியர்ப்பது தெரிகிறது. குறைவாக உள்ள இடங்களில் தெரிவதில்லை.
அதாவது உடலின் சில இடங்களில் அதிகமான வியர்வை சுரப்பிகள் உள்ளன. உதட்டில் வியர்வை சுரப்பிகள் மிக மிகக் குறைவு. அதனால்தான் உதட்டில் வியர்ப்பது நமக்குத் தெரிவதில்லை.
அதிலும் ஒரு சிலருக்கு அதிகமான வியர்வை சுரப்பிகள் உள்ளங்களை, பாதங்களில் அமைந்துவிடுவதும் உண்டு.
இனி யாரும் வியர்க்காத இடம் உண்டு, அது எது தெரியுமா என்று கேட்டால், உடலில் வியர்க்காத இடம் என்று எதுவுமில்லை. உதட்டு மேலயும் வேர்க்கும் என்பது உனக்குத் தெரியுமா? என பதில் கேள்வி கேளுங்கள்.