பிற உணவுடன் பழங்களை சாப்பிட வேண்டாம். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும் போது பழங்கள் வேகமாக ஜீரணமாகின்றன.
பழங்களில் சர்க்கரைத்தன்மை இருப்பதால் அவை வயிற்றில் நொதிக்கும் செயலில் ஈடுபடுகிறது. இது பொதுவாக நல்லதுதான். ஆனால் நீங்கள் நிறைய உணவு சாப்பிட்ட பின் பழங்கள் சாப்பிட்டால் ஜீரணம் மெதுவாக நடைபெறுகிறது.
இதனால் நீண்ட நேரம் நொதித்தல் நடைபெற்று வாயுப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் போன்றவை ஏற்படுகிறது.
எனவே இரண்டு உணவு வேளைகளுக்கு இடையே பழங்களை சாப்பிடலாம். பழங்களை பழச்சாறாக மாற்றாமல் பழமாகவே சாப்பிடுவது மிகவும் நல்லது.
பழச்சாறில் கலோரிகள் அதிகமாக இருக்கும். அதில் சர்க்கரை வேறு சேர்ப்பதால் தேவையில்லாமல் உடலுக்கு சர்க்கரை கிடைக்கிறது.
எனவே பழத்தை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அதனால் நமது உடலுக்கு நார்ச்சத்து கிடைக்கிறது.