அதிகம் உப்பு சேர்ப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, வயிற்றுப் புற்றுநோயும் ஏற்படுகிறது.
எல்லா உணவுகளிலும் சோடியச்சத்து உள்ளதால், குறைவான அளவு உப்பு பயன்படுத்தவும்.
சின்ன வயதிலிருந்தே, உப்பு குறைவாக எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை உருவாக்கவும்.
குறைவான உப்புள்ள உணவை சுவைக்கக் கற்றுக் கொள்ளவும்.
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான அப்பளம், ஊறுகாய், சாஸ், கெச்சப், தொக்கு, பாலாடை, கறுவாடு போன்றவற்றை உண்பதை குறைக்கவும்.
பொட்டாசியம் சத்து பெற அதிக அளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடவும்.
ஐயோடின் ஏற்றப்பட்ட உப்பு பயன்படுத்தவும்.