நாம் கண்ணிமைக்கும் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டதாக கணக்கிடுகிறார்ளாம் ஆய்வாளர்கள்.
மேலும், நம் கண்களுக்கு ஈரப்பசையை அளிப்பதே இந்த இமைகள்தான். அதனால் தான் டிவி மற்றும் கணினியைப் பார்க்கும் போது நமது இமைகள் இமைப்பது குறைந்து விடுகிறது. இதனால் கண்களுக்குத் தேவையான ஈரப்பசை குறைந்து பார்வைக்கு கோளாறு ஏற்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு குறைந்தது 20 முறையாவது இமைகள் இமைக்க வேண்டுமாம்.
கண்ணுக்கு மேலாக மறைவாக லாக்ரிமல் கிளாண்ட் என்று ஒரு சுரப்பி உள்ளது. இந்த சுரப்பி சுரக்கும் லாக்ரிமா என்ற திரவம்தான் கண்ணீர்.
பொதுவாக விழிக்கோளத்தில் தூசு படும்போது அதை அலம்பி விடுவதுதான் இந்த சுரப்பியின் வேலை. இது தொடர்ந்து இயங்கும்போது நம் கண்ணில் கண்ணீர் வடிகிறது.