எதைச் சாப்பிடலாம் எதை சாப்பிடக் கூடாது என்று தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் கொஞ்சமாக சாப்பிடுகிறேன் என்று சொல்லி ஒரு ஆப்பிள் பழச்சாறு, 4 பிஸ்கெட் மட்டும் சாப்பிடுவார்கள்.
ஆனால் 4 இட்லியில் இருக்கும் கலோரியை விட இதில் அதிகமாக இருக்கும். எனவே உடல் பருமன் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கும்.
எனவே நாம் எதை சாப்பிடுகிறோம், அதில் எத்தனை கலோரிகள் உள்ளன. நமது உடலுக்கு எது நல்லது, எதை நாம் சாப்பிடக் கூடாது என்பதை விவரமாக அறிந்து கொண்டு பின்னர் உணவுக் கட்டுப்பாட்டைக் கையாள வேண்டும்.