Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் இதய நோயாளிகள்

Advertiesment
இந்தியாவில் இதய நோயாளிகள்
, திங்கள், 5 மே 2008 (12:04 IST)
இந்தியாவில் வரும் இரண்டு ஆண்டுகளில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், உலக அளவில் இதய நோயாளிகளில் 60 விழுக்காட்டினர் இந்தியர்களாக இருப்பார்கள் என்றுமஆய்வறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

இந்திய மற்றும் கனட நாட்டைச் சேர்ந்த ஒரு குழுவினர் இணைந்து நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இதய நோய் பற்றிய விழிப்புணர்வும், அதற்கான சிகிச்சையையும் உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் இந்த நிலை இன்னும் மோசமடையும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதாவது உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள 50 நகரங்களில் அமைந்திருக்கும் 89 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 21,000 மாரடைப்பு நோயாளிகளிடம் நடத்திய ஆய்வின் மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கும், கொழுப்புச் சத்து அதிகமாக உடையவர்களுக்கும், மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலின் காரணமாகவும் மாரடைப்பு நேரிடுகிறது.

இது எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும் என்றபோதிலும், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு இந்தியாவில் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளப்படாததாலும், உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதுவும் இதய நோயாளிகள் அதிகரிக்க காரணமாகிறது.

மேலும், இந்தியாவில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒரு சிலரே துரித ஊர்தியைப் பயன்படுத்தி மருத்துவமனைக்கு செல்கின்றனர். பெரும்பாலும் ஏழை மக்கள் தனியார் வாகனங்களையும், ஒரு சில இடங்களில் அரசு போக்குவரத்தையும் நம்பியுள்ளனர்.

நகரப் பகுதிளைத் தவிர பல்வேறு ஊரகப் பகுதிகளில் ஒரு சில மணி நேரங்கள் பயணித்தால்தான் மருத்துவமனையையே அடைய முடியும் நிலை உள்ளது.

இதனால் தா‌ன் இ‌ந்‌தியா‌வி‌ல் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

மேலும், இதயத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்து கொள்ளும் அறுவை சிகிச்சைக்குத் தேவையான பணம் இல்லாமலும் பலர் தங்களது இன்னுயிரை இழக்கின்றனர்.

எனவே இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வதற்குக் காரணம் சரியான சிகிச்சையின்மையே என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil