Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தண்ணீர் பல வியாதிகளை குணப்படுத்தும்!

Advertiesment
தண்ணீர் பல வியாதிகளை குணப்படுத்தும்!
, செவ்வாய், 26 பிப்ரவரி 2013 (19:23 IST)
FILE
தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்று விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப்பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகரமாக குணப்படுத்த முடியும் என ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

தலை வலி, உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய், வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறுநீரகம் மற்றும் சிறுநீர் வியாதிகள், வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், மூல வியாதி, சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்கு, தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம்மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை:

1. காலையில் துயில் நீங்கி நீங்கள் எழுந்ததும், பல் துலக்கும் முன்பே 4 X 160 மிலி டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய உணவு, இரவு உணவின் போது 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம்.

5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடைய முடியும். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.

இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது கடுமை மட்டுப்படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்

வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்

சர்க்கரை வியாதி - 30 நாட்கள்

மலச்சிக்கல் - 10 நாட்கள்

புற்றுநோய் - 180 நாட்கள்

காச நோய் - 90 நாட்கள்


ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம்முறையினைப் பின்பற்ற வேண்டும்.

பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது. எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.

நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?

Share this Story:

Follow Webdunia tamil