Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 8 January 2025
webdunia
Advertiesment

குழந்தைகளின் பற்களை பாதுகாத்தல்

குழந்தைகளின் பற்களை பாதுகாத்தல்
, வியாழன், 17 மே 2012 (16:35 IST)
முதல் பல் முளைப்பது குழந்தைக்கு குழந்தை மாறுபடும். பொதுவாக பிறந்து 6 மாதங்களில் கீழ் வரிசையின் மத்தியில் முதல் பல் முளைக்கும். பிறந்து ஒரு ஆண்டு வரையிலும் கூட பல் எதுவும் முளைக்காமலே கூட இருக்கும். இரண்டறை வயதில் 20 பால் பற்கள் முளைத்துவிடும். பால் பற்கள் தற்காலிகமானவை, நிரந்தரப் பல் 6 வயது வாக்கில் முளைக்கத் தொடங்கும்.

குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கும் முன்பே, பெற்றோர்கள் அக்கரை செலுத்த தொடங்குவது நல்லது, பல் முளைக்கும் முன்பே ஈறுகளை மென்மையான ஈரத்துணியால் உணவு கொடுத்த பிறகு சுத்தம் செய்வது முதல் படி. பல் முளைத்தவுடன் மென்மையான டூத் பிரஷ்ஷால் நாளைக்கு 2 முறை பல் விளக்கலாம். டூத் பேஸ்ட் வர்த்தக விளம்பரங்களில் காண்பிப்பது போல் நீளமாக பிரஷ் பகுதி முழுவதும் பற்பசையை போட வேண்டிய அவசியமில்லை, சிறு கீற்று போல் போட்டாலே போதுமானது. சிறு குழந்தைகள் புளோரைட் சுவைக்கு மயங்கி பற்பசையை உட்கொள்வது சகஜம், ஆனால் அதிக புளோரைட் உட்கொண்டால் பற்களில் நிரந்தரக்கறை படிந்துவிடும்.

பிறகு ஏன் பற்பசையில் புளோரைடைச் சேர்க்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். புளோரைட் என்பது இயற்கையாகவே சம்பவிக்கும் ஒரு கனிப்பொருள், பற் சிதைவிலிருந்து புளோரைட் பற்களை பாதுகாக்கிறது. நம் எச்சிலில் உள்ள கனிப்பொருள்கள் கூட பற்களை உறுதிப்படுத்தும், ஆனால் இதற்கும் கூட புளோரைட் தேவை. தண்ணீரிலிருந்து தேவையான புளோரைட் கிடைப்பதில்லை. இதனாலேயே பற்பசையுடன் புளோரைட் சேர்ப்பது வழக்கம்.

ஆனால் பற்பசையில் புளோரைடின் அளவு குறித்து நாம் கவனம் கொள்வது நல்லது, பற்பசையில் புளோரைடின் அளவு 500 ஞஞஆ முதல் 1000-1500 ஞஞஆ வரை இருக்கும்.

7 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 500 ஞஞஆ புளோரைட் அடங்கிய பற்பசையே சரியானது. ஏனெனில், நிரந்தரப் பற்கள் முளைக்கும்போது அதிகமான புளோரைட் பற்பசை பற்களில் நிரந்தரக் கறையை உருவாக்கிவிடும்.

குழந்தைகளின் உணவுப்பழக்க வழக்கம் பல் பாதுகாப்பில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. எச்சில், பற்களை சுத்தப்படுத்தும். ஆனால், எச்சில் ஊற நேரம் தேவை. பகலில் குழந்தைகளுக்கு தீனி அடிக்கடி கொடுக்கப்பட்டால், எச்சில் பற்களை சுத்தம் செய்ய வாய்ப்பே இருக்காது. இரண்டு உணவுகளுக்கிடையே இனிப்புகள் வழங்குவதை நிறுத்த வேண்டும்.

பாலையோ, தண்ணீரையோ பாட்டில்களில் கொடுத்தால் குழந்தைகளின் பற்களுடன் அது நீண்ட நேரம் தொடர்பு கொண்டிருக்கும். இது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு வயது முடியும் தருவாயில் கோப்பையில் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்தி விடுவது சிறந்தது. அதே போல் படுக்கையில் குழந்தைகளை பாட்டிலுடன் கிடத்த வேண்டாம், பகலிலும் கூட குழந்தையை பாட்டிலும் கையுமாக அலைய விடுவதை தவிர்ப்பது நல்லது.

ஈறுகளில் பற்கள் முளைக்கும் போது குழந்தைகளுக்கு லேசாக வலி ஏற்படலாம் அல்லது சிறு சிறு அமளயிலும் குழந்தைகள் ஈடுபடும். பல் முளைக்கும் போது, காய்ச்சல், வயிற்றுப் போக்கு மற்றும் பிற நோய்கள் ஏற்படாது. இது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை கலந்தாலோசியுங்கள்.

ஒரு வயது முடிந்தவுடன் பல் மருத்துவரிடம் குழந்தையை காண்பிப்பது நல்லது. இதன் மூலம் மருத்துவருக்கும் பிரச்சினைகள் முதலிலேயே தெரிந்துவிடும் என்பதோடு ரெகுலர் செக் அப்பிற்கு குழந்தையும் தயாராகிவிடும்.

குழந்தைகளுக்கு விவரம் தெரியும்போது பற்களை சுத்தமாக வைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் கற்றுக் கொடுப்பது அவசியம்.

Share this Story:

Follow Webdunia tamil