Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதோ மதுவின் கொடுமைகள் - அவை என்ன?

இதோ மதுவின் கொடுமைகள் - அவை என்ன?
, புதன், 21 மார்ச் 2012 (15:58 IST)
கல்லீரல் பாதிப்பு - மது, கல்லீரலை வீங்கச் செய்யும் ஆல்கஹாலிக் ஹெபாடிடிஸ் (கல்லீரல் வீக்கம் மற்றும் மஞ்சள்காமாலை) மற்றும் சிரோசிஸ் (கல்லீரல் நிரந்தரமாக சேதம் அடைதல்)

மயக்கத்தில் ஆழ்த்துதல் - அதிகமாக மது அருந்துவதால் ஏற்படும். கண் விழிக்கும்போது தலைவலி இருக்கும்.

மூளையின் செயல்பாடுகள் - மது மூளையைப் பாதித்து செயல்திறனைக் குறைக்கிறது. உங்களின் முடிவுகள், சுய கட்டுப்பாடு மற்றும் உடல் ஒத்துழைப்பு அனைத்தையும் பாதிக்கிறது. விபத்துக்கள் ஏற்பட முக்கிய காரணம் மது தான்.

ஊட்டச்சத்துக் குறைவு / பசி இழப்பு - தாதுச் சத்துக்கள், துத்தநாகச் சத்து, எசலேனியம், வைட்டமின் ஏஃபலேட், புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவை உணவில் குறைவாக இருப்பதாலேயே இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நீங்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையா ?

நீங்கள் மதுவை விட்டு விலக விரும்பினால் - இந்த மூன்று வழி முறைகளையும் பாருங்கள்

முதல் வழி முறை : உங்கள் மனதை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களின் மன உறுதி வலுவாக இருக்குமானால், நீங்கள் துரிதமாக மதுவை விட்டு விடுவீர்கள்.

2 வது வழிமுறை :

மதுவின் அளவை குறைத்துக் கொள்தல்

ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்கிறீர்கள் என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

வரம்பைத் தாண்டாதீர்கள்

ஒரு தடவை குடித்தபின் நீண்ட இடைவெளிக்குப் பின்பு குடியுங்கள்.

மது அருந்துவோர் வட்டத்தைத் தவிர்க்கவும்

உங்களின் முன்னேற்றத்தைப் பட்டியலிடுங்கள்

ஒரு நாள் முழுதும் மது குடிப்பதை நிறுத்தி விடுங்கள்

உங்களுக்குப் பிடித்தமான வேறு ஏதாவது செயலில் ஈடுபடுங்கள்.

ஒரு நண்பரிடமோ அல்லது நெருங்கிய உறவினரிடமோ உங்கள் பிரச்சினை பற்றி விவாதியுங்கள். இது மன அழுத்தத்தில் இருந்து ஆறுதல் தரும்.

3 வது வழிமுறை :

மதுவுக்கு விடை கொடுங்கள்.

மதுவை மறுப்பதில் உறுதியாயிருங்கள்.

மதுவை விட்டு விடுவது கஷ்டமாகத் தோன்றினால், மனம் தளராதீர்கள். முயற்சியை விடாதீர்கள். தொடர்ந்து முயலுங்கள்.

உங்கள் மருத்துவரிடமோ அல்லது மது பழக்க ஒழிப்பு மையத்திடமோ ஆலோசனை பெறுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil