Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழந்தை சாயலை வைத்து குணம்?

Advertiesment
பாலியல் பாலுறவு மனித சந்ததி பாலுறவு இனப்பெருக்கம்
, செவ்வாய், 10 மார்ச் 2009 (17:02 IST)
பாலியல் தொடர்பாக ஏற்கனவே பல கட்டுரைகளை நாம் அளித்துள்ளோம். குறிப்பிட்ட வயது வரும்வரை அதாவது, ஆண்-பெண் இருபாலரும் ஏறக்குறைய 13 - 15 வயதாகும் வரை பாலுறவு, ஆண்-பெண் புணர்ச்சி போன்ற விவரங்கள் சரி வரத் தெரியாத அல்லது உணராத சூழ்நிலையில் தான் வளர்கின்றனர் என நம்பலாம்.

என்றாலும் இந்தநிலை இந்தியாவில்தான் என்பதை நாம் நெஞ்சு நிமிர்த்திக் கொண்டு சொல்ல முடியும்.

அமெரிக்கா போன்ற நாகரீகம் வளர்ந்த, மெத்தப் படித்த சமுதாயத்தில் 11 வயதாகும் போதே ஒரு குழந்தைக்குத் தாயாகும் சிறுமிகள் பற்றிய செய்திகளை அறிகிறோம்.

பாலுறவு அல்லது ஆண்-பெண் உறவு, ஒருவனுக்கு ஒருத்தி என்ற விகிதமெல்லாம் குறைந்த விழுக்காட்டிலேயே உள்ளதை அறிகிறோம்.

இந்தியாவில் குடும்ப பந்தம், சமூக ஒழுக்கம், திருமண பந்தம் என்ற நிலை 99 விழுக்காடு அளவிற்கு இன்றளவும் தொடர்கிறது. எங்காவது ஒரு மாநிலத்தில் ஏதாவது ஒரு நகரத்தில் ஒரு விழுக்காட்டினர், இந்த திருமண உறவு முறையில் இருந்து மாறுபட்டிருக்கலாம். ஆனால், 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அந்த விழுக்காட்டினருக்கு முக்கியத்துவம் குறைந்து விடுகிறது.

திருமணத்திற்குப் பின் பாலுறவு அல்லது தாம்பத்ய உறவின் மூலமே இனப்பெருக்கம் என்ற அடிப்படையில், மனித சந்ததியினரைப் பெருக்குகிறோம்.

தாய்-தந்தை அவர்கள் மூலம் மகன், மகள் என்ற அடிப்படியில் கல்வி, கலாச்சாரம், நாகரீகம், சொந்தம் - பந்தம், உறவு முறைகள் என்ற ரீதியில் இந்திய நாகரீகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் திருமணத்திற்குப் பின் கணவனும், மனைவியும் கலந்து பெற்றெடுக்கும் குழந்தை யாரைப் போன்று இருக்கிறது? என்பதை நம் வீட்டில் உள்ள முதியவர்கள் (தாத்தா-பாட்டிமார்) சொல்லக் கேட்டிருப்போம்.

`அப்படியே அப்பாவையே உரிச்சு வைச்சிருக்கான் பார்' என்று கூறி கொஞ்சுவார்கள்.

குழந்தைகளின் ஒட்டுமொத்த உடலமைப்பைப் பார்க்கும்போது, பெற்றோர் அல்லது மூதாதையரின் சாயல் மற்றும் குணாதிசயங்கள் என்று எடுத்துக் கொண்டால், 50 விழுக்காடு அளவுக்கே இருக்கும்.

ஆனால் 100 விழுக்காடு ஜெராக்ஸ் காப்பி போன்ற அமைப்பில் குழந்தைகள் இருக்க வாய்ப்பில்லை.

சில குழந்தைகள் அப்பா, அம்மா மாதிரி சாயல் இல்லாமல் உறவு வழிமுறையில் அதாவது மாமா, தாத்தா, பாட்டி, அத்தை போன்ற உறவினர்களின் சாயலில் இருப்பதாகக் கூறுவதையும் பார்த்திருக்கிறோம்.

ஆனால் குணாதிசயங்களில் ஒரு சில குழந்தைகள் பெற்றோரை ஒத்திருந்தாலும், 100 விழுக்காடு அளவுக்கு அதே குணத்தைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை.

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனித்தனி தன்மைகள், அவர்களின் செல்கள் அமைப்பைப் பொருத்து உண்டு.

எனவே சாயலில் ஒரேமாதிரி இருப்பதாலேயே, அவர்கள் சாயலில் இருப்பவர்கள் மாதிரியான குணம் இருக்கும் என்று கருதி விட வேண்டாம்.


Share this Story:

Follow Webdunia tamil