தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர்கள் கண் பார்வையிழப்பில் இருந்து தப்பி விடுவார்கள் என்று ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டப்பயிற்சி மேற்கொண்டுள்ள 41 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வின்படி, அவர்களுக்கு கண்புரை நோய் மற்றும் வயோதிகத்தினால் ஏற்படும் தசை தொடர்பான நோய்கள் ஏற்படுவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தீவிரமாக உடற்பயிற்சி செய்வோருக்கு கண் பார்வை இழப்பு ஏற்படாது என்றும், கண் நோய்களும் ஏற்படுவதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
கண்களுக்கு வழக்கமான பரிசோதனை செய்வதாலும் பார்வையை சீராக வைத்திருக்க முடியும் என்று ஆய்வை மேற்கொண்ட பால் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
தீவிர உடற்பயிற்சி உள்ளிட்ட உடல் தகுதிக்காக மேற்கொள்ளப்படும் பயிற்சிகளால், கண் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து விடுபடுவதாகவும் அந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
பார்வை குறைபாட்டிற்கு முக்கியக் காரணமாக விளங்குவது கேட்டராக்ட் எனப்படும் கண்புரை நோய் ஆகும். அமெரிக்காவைப் பொருத்தவரை 65 வயதானவர்களில் 50 விழுக்காட்டினருக்கு கண்புரை நோய் பாதிப்பு உள்ளது.
வயோதிகத்தினால் ஏற்படும் கண் லென்ஸ் பாதிப்புகளினாலும் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. 75 வயது நிரம்பியவர்களில் 28 விழுக்காட்டினருக்கு இந்நோய இந்த பாதிப்பு உள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.
வாரத்திற்கு 5 நாட்கள் வேகமாக நடைபயிற்சி உள்ளிட்ட 30 நிமிட நேர தீவிர உடற்பயிற்சி மேற்கொள்வோருக்கு உடல் நலம் நல்ல நிலையில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த உடற்பயிற்சியில் ஓட்டமும் அடங்கும்.
என்றாலும் நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு கண்புரை நோய் ஏற்படாது என்று உத்தரவாதமாகக் கூறி விட முடியாது.
என்றாலும் வாக்கிங் செல்வதன் மூலம் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும் என்று தெரிய வந்துள்ளது.