Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பால் அருந்துவோம்! எலும்புகளைக் காப்போம்!

பால் அருந்துவோம்! எலும்புகளைக் காப்போம்!
, வியாழன், 12 ஜூன் 2008 (13:04 IST)
பால் போன்ற அதிக சத்துள்ள ஒரு பொருளை நாம் காண்பது அரிது. ஆனால் எலும்பு முறிவு ஏற்படும் சாத்தியங்களையும் பா‌லி‌ல் உள்ள சத்துகள் குறைக்கிறது என்று சமீபத்தில் வெளிவந்துள்ள ஆய்வு ஒன்று தெரிவிக்கும்போது நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிகல் நியூட்ரீஷன் என்ற பத்திரிக்கையில் சமீபமாக வெள்யிடப்பட்ட கட்டுரையில் இந்த தகவல் வெளியாகியுளது.

அதாவது பாலில் உள்ள கால்சியம் சத்து எலும்பு முறிவை தடுக்கும் சக்தி கொண்டது என்று கூறுகிறது இந்த ஆய்வு. ஆரோக்கியமான ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 1,200 மில்லி கிராம் கால்சியம் சத்து தேவைப்படுகிறது.
webdunia photoFILE


அதாவது 51 வயது தாண்டியவர்களுக்கு சிபாரிசு செய்யப்படும் கால்சியத்தின் அளவு இது என்பது குறிப்பிடத்தக்கது. இது 4 டம்ளர் பாலில் கிடைக்கிறது. தினமும் 4 டம்ளர் பால் அருந்தினால் எலும்பு முறிவு 70 விழுக்காடு தடுக்கப்படுகிறது என்று இந்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூரிக் பல்கலைக் கழக மருத்துவமனை, டார்ட்மௌத் மருத்துவப் பள்ளி ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து 27 வயது முதல் 80 வயது வரை உள்ள நபர்களை 4 ஆண்டுகளாக ஆய்வு செய்து பால் பற்றிய இந்த அரிய உண்மையை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த 4 ஆண்டு கால ஆராய்ச்சியில் தினமும் நமக்கு நம் உடலுக்கு கிடைக்கும் கால்சியம் சத்தைக் காட்டிலும் அதிகமாக 1,200 மில்லி கிராம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் பெருமளவு குறைந்துள்ளதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

அதாவது நாம் சாதாரணமாக நிற்கும்போது, நடக்கும்போது, அல்லது ஓடும்போது ஏற்படுகிற எலும்பு முறிவு சாத்தியங்கள் முதல், சிறு விபத்தினால் ஏற்படும் எலும்பு முறிவு சாத்தியங்களையும் , நாளொன்றுக்கு 4 டம்ளர் பால் அல்லது 1,200 மிலி கிராம் கால்சியம் தடுத்து நிறுத்துகிறது.

நமது எலும்புகள் 35 வயது வரை பலமாகவும், உறுதியாகவும் வளரும் தன்மை கொண்டது. ஆனால் இதன்
webdunia
webdunia photoFILE
பிறகுதான் எலும்புத் தேய்மானம் ஏற்படுவதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இதனை நாம் பால் அருந்தி தடுக்கவிலையெனில் ஆஸ்டியோபொரோசிஸ் என்ற தீவிர எலும்புத் தேய்மான நோயில் கொண்டு தள்ளி விடும்.

எனவே கொழுப்புச் சத்தில்லாத பாலை தினமும் அருந்தி எலும்பு ஆயுளை நீட்டிப்போம். மேலும் பாலில் உள்ள வைட்டமின் டி சத்து உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை நம் உணவுப் பொருளிலிருந்து எடுத்துக் கொள்ளும் செயலை திறம்படச் செய்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil