தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி 125 கிராம்
பச்சரிசி 125 கிராம்
துவரம் பருப்பு - இரண்டு தேக்கரண்டி
வெந்தயம் - சிறிதளவு
செய்யும் முறை
புழுங்கல் அரிசி, பச்சரிசி, துவரம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை முதல் நாள் இரவு ஊற வைத்துக் கொள்ளவும்.
மறுநாள் காலையில் தோவை மாவுக்கு அரைப்பது போல பதமாக அரைத்துக் கொள்ளவும்.
மாவில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு அடித்து தோசை வார்க்கலாம்.
உளுந்துக்குப் பதில் துவரம் பருப்புச் சேர்க்க சுவை மாறுதலாக இருக்கும்.