தேவையானவை
பச்சரிசி - 250 கிராம்
பாசிப்பருப்பு - 75 கிராம்
தேங்காய் - அரை மூடி
நெய் - 50 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
முந்திரிப் பருப்பு - 20 கிராம்
உலர்ந்த திராட்சை - 20 கிராம்
ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
செய்யும் முறை
பாசிப்பருப்பை வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
முந்திரிப் பருப்பையும் உலர்ந்த திராட்சையையும் பொடியாக நறுக்கிச் சிறிதளவு நெய்யில் வறுத்துக் கொள்ளுங்கள்.
தேங்காயைத் துருவி ஒரு கிண்ணத்தில் போட்டுத் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அரிசியைக் களைந்து ஒரு பாத்திரத்தில் போட்டு அளவான நீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேகவிடுங்கள்.
அரிசி பாதி வெந்ததும் பாசிப்பருப்பைப் போட்டு கிளறிவிட்டுத் தொடர்ந்து வேகவிடுங்கள்.
அரிசி முழுவதுமாக வெந்ததும் சர்க்கரையை சிறிது சிறிதாகப் போட்டு கிளறுங்கள்.
அதன்பின் தேங்காய்த் துருவல், வறுத்த முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை ஆகியவற்றைப் போட்டு ஏலக்காய்த் தூளைத் தூவி மீதமுள்ள நெய்யையும் ஊற்றி எல்லாவற்றையும் சேர்த்துக் கிளறினால் சுவையான சர்க்கரை சாதம் தயாராகிவிடும்.