தேவையானவை
வேர்க்கடலை - 100 கிராம்
வெள்ளை எள் - 25 கிராம்
வெல்லம் - 200 கிராம்
நெய் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - ஒரு மேஜைக்கரண்டி
செய்யும் முறை
வேர்க்கடலையை லேசாக வறுத்து, தோலை நீக்கி, இரண்டு பாகமாக உடைத்து சுத்தும் செய்து கொளள வேண்டும்.
எள்ளையும் லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாய் அகண்ட பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லத்தைப் போட்டுக் கொதிக்க விட வேண்டும்.
வெல்லம் நன்கு பாகு பதத்திற்கு ஆனதும், அதில் வேர்க்கடலை மற்றும் எள்ளைக் கொட்டி இரண்டு நிமிடம் வேக விட்டு இறக்கிவிடவும்.
நெய் தடவிய ட்ரே அல்லது தட்டில் பர்ஃபி பாகைக் கொட்டி, ஒரே சீராக பரப்பி விடவும். லேசாக ஆறியதும் உங்களுக்குத் தேவையான வடிவங்களில் துண்டு போட்டுக் கொள்ளுங்கள்.