தேவையான பொருட்கள் :
உளுத்தம்பருப்பு - 1 கப்
பச்சரிசி - கால் கப்
கல்கண்டு - ஒனறேகால் கப்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
உளுத்தம்பருப்பு, அரிசியை 1 மணி நேரம் ஊற வையுங்கள்.
தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, ஒட்ட அரைத்தெடுங்கள்.
அவ்வப்பொழுது சிறுது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்க வேண்டும்.
நன்கு நைஸாக ஆட்டப்பட்டதும் கல்கண்டையும் சேர்த்து அரையுங்கள்.
எண்ணெயை நிதானமான தீயில் காய வைத்து, மாவை சிறு வடைகளாக தட்டி போட்டு நன்கு வேக விட்டெடுங்கள்.