சுவையான அரிசி - ரவை லட்டு செய்வது எப்படி? இதோ உங்களுக்கான செய்முறை...
என்ன தேவை?
அரிசி - 50 கிராம்
ரவை - 50 கிராம்
நெய் - 20 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
எப்படி செய்வது?
அரிசியை நன்கு சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.
அரிசியையும், ரவையையும் தனித்தனியே வறுத்துக் கொள்ளவேண்டும்.
அரிசியை நன்கு மாவாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
அத்துடன் தூள் செய்த சர்க்கரையை மற்றும் ரவையைக் கலந்து நெய்யை உருக்கி ஊற்றி சுடச் சுட சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவேண்டும்.
அரிசி - ரவை லட்டு தயார்!