மைக்ரோவேவ் அவனில் உணவை சமைக்கும் போது எந்த உணவை எவ்வளவு நேரம் சமைப்பது என்று தெரியாதபட்சத்தில், குறைந்த நேரத்தில் சமைப்பது நல்லது.
உணவை அதிகப்படியான நேரம் சமைத்தால் மிகவும் குழைந்து போய்விடும். அல்லது அதிகமான நேரம் வைத்திருக்கும் போது தீய்ந்து போகவும் வாய்ப்பு உண்டு. ஏன் சில உணவுப் பொருட்கள் தீப்பிடித்து எரியும் அபாயமும் உண்டு.
எனவே, எந்த உணவாக இருந்தாலும் ஒரு அளவான நேரத்தில் வைத்து சமைப்பது மிகவும் அவசியம். அப்படி சரியான நேரம் தெரியாதபட்சத்தில் குறைவான நேரத்தில் சமைப்பது நல்லது.
ஒரு வேளை சமைத்து எடுத்ததும், உணவுப் பொருள் வேகாமல் இருந்தால், ஓரிரு நிமிடங்கள் மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுக்கலாம்.
இதனால் உணவு சரியான ருசிக்கு வந்து விடும். தவிர, அடுத்த முறை சமைக்கும் போது சரியான நேரத்தை நீங்கள் தெரிந்து கொள்ள இயலும்.