தேவையானவை
முட்டை - 1
மிளகு தூள் - 2 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - சிறிது
செய்யும் முறை
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடாக்கவும்.
தோசைக் கல்லில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
அதன் மீது உப்பு, மிளகுத் தூள் தூவவும். சுற்றிலும் எண்ணெய் விடவும்.
3 நிமிடம் கழித்து அப்படியே எடுத்து பரிமாறவும். இதுதான் அரைவேக்காடு முட்டை. இதனை திருப்பிப் போடக் கூடாது.
சிலருக்கு மஞ்சள் கரு அப்படியே இருப்பது பிடிக்காமல் போனால், முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
அதனை தோசைக் கல்லில் ஊற்றி அதன் மீது உப்பு, மிளகுத் தூள் தூவவும். திருப்பிப் போடாமல் சாப்பிடடால் சுவை நன்றாக இருக்கும்.