தேவையான பொருட்கள் :
கோழியின் இறக்கைப் பகுதி - 1/4 கிலோ
வெங்காயத்தாள் (ஸ்பிரிங் ஆனியன்) - ஒரு கைப்பிடி
நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒரு கப்
மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
அரைத்த இஞ்சி - தேவையான அளவு
அரைத்த பூண்டு - தேவையான அளவு
தக்காளி சாஸ் - ஒரு கப்
மக்காச்சோள மாவு, மைதா மாவு - ஒரு தேக்கரண்டி
முட்டை - ஒன்று
உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய விடவும்.
முதலில் சிக்கனை மக்காச்சோளம், மைதா மாவுகளில் பிரட்டி அடித்து கலக்கி வைத்திருக்கும் முட்டையில் தோய்த்தெடுக்கவும்.
இதனை எண்ணெயில் நன்றாகப் பொரித்துக் கொள்ளுங்கள்.
பின்னர் மற்றொரு வாணலி வைத்து அதில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயம், இஞ்சி, பூண்டை வதக்கி, மிளகாய் பொடியும், தக்காளி சாஸும் ஊற்றி வதக்கிக் கொள்ளுங்கள்.
பிறகு ஸ்பிரிங் ஆனியன் போட்டு மீண்டும் வதக்கி பொறித்து வைத்திருக்கும் சிக்கனையும் போடுங்கள். . . வதக்குங்கள். . . சிக்கன் விங்லெட் தயார்.