விடுமுறையில் இருக்கும் நமது பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பும் வகையில் மீன் கட்லெட் செய்து கொடுத்துப் பாருங்கள். உங்களையே சுற்று சுற்றி வருவார்கள். செய்வதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும் தான். ஆனால் பாராட்டு மழையில் நனையலாம்.
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை
மீன் - 500 கிராம்
ரொட்டி - 2 துண்டுகள்
எலுமிச்சம்பழம் - பாதி
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 5
முட்டை - 1
ரஸ்க் தூள்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்துமல்லி, கறிவேப்பிலை
செய்யும் முறை
சதைப்பற்றுள்ள மீனாக வாங்கி நன்றாக அலம்பி சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிரட் துண்டை தண்ணீரில் முக்கி எடுத்து, நன்கு பிழிந்து கொள்ளவும்.
பிழிந்து வைத்திருக்கும் பிரட்டுடன் வெங்காயம், பச்சை மிளகாய், வெந்த மீன், எலுமிச்சை சாறு முதலியவைகளை ஒன்றாக சேர்த்து, உப்பு போட்டு தேவையான வடிவில் செய்து கொள்ளவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து காய விடவும்.
முட்டையை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும். கட்லட்டை முட்டையில் முக்கி, தட்டில் கொட்டி பரப்பி வைத்திருக்கும் ரஸ்க் தூளில் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.
அதைன தோசை கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு இரு பக்கமும் நன்கு சிவந்ததும் இறக்கவும்.
கொத்துமல்லி, கறிவேப்பிலை தழைகளை நறுக்கி கட்லட் மீது தூவி பரிமாறவும். சூடான, சுவையான, சுகாதாரமான கட்லட் தயார்.