தேவையான பொருட்கள்
காலிபிளவர் - 1 கப்
எண்ணெய் - 250 கிராம்
பஜ்ஜி மாவு - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
காலிபிளவரை நறுக்கி சுத்தம் செய்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பஜ்ஜிமாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த காலிபிளவரை பஜ்ஜிமாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான காலிபிளவர் பஜ்ஜி தயார்.