தேவையானப் பொருட்கள் :
கூழ் வற்றல் - 20
பூண்டு - 20 பல்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கேற்ப
சாம்பார்பொடி - இரண்டரை ஸ்பூன்
தாளிக்க - எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம்
செய்முறை :
கூழ்வற்றலை கொதிக்கும் நீரில் போட்டு ஊறவைக்கவும் (அரை மணியிலிருந்து முக்கால் மணிநேரம்).
வெங்காயம், பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மேலே கூறியுள்ள தாளிக்கும் பொருள்களை போட்டு, பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தையும், பூண்டையும் சேர்த்து சற்று வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
புளியையைம் உப்பையும் 6 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டி சாம்பார்பொடி சேர்த்து கலக்கி, வதங்கிய வெங்காயம் பூண்டு, தக்காளியில் ஊற்றவும்.
அது நன்கு கொதித்து வரும் போது, ஊறவைத்த வற்றலை அதில் இருக்கும் நீரை வடித்துவிட்டு குழம்பில் சேர்க்கவும். கால் மணிநேரம் கழித்து கெட்டியானதும் இறக்கவும்.