Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் ஏற்ற இறக்கத்துடன் பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

Siva
திங்கள், 22 ஜூலை 2024 (11:39 IST)
இன்று ஒரே நாளில் பங்குச்சந்தை ஏற்ற இறப்பு தடை இருந்து வரும் நிலையில் வர்த்தகர்கள் குழம்பி போய் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுவாக பங்குச்சந்தை காலை உயர்ந்தால் அன்றைய நாள் முழுவதும் உயரும் என்றும் காலையில் சரிந்தால் அன்றைய நாள் முழுவதும் சரிந்து காணப்படும் என்று தான் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இன்று காலை சரிவில் தொடங்கிய பங்குச்சந்தை தற்போது ஏற்றத்தில் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் வர்த்தகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 120 புள்ளிகள் வரை சரிந்திருந்த நிலையில் தற்போது ஐந்து புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. அதே போல் நிப்டி இன்று காலை சரிந்த நிலையில் தற்போது 7 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. மிகவும் குறைவான புள்ளிகள் மட்டுமே உயர்ந்துள்ளதால் மீண்டும் சரிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் புதிதாக முதலீடு செய்பவர்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஐசிஐசிஐ வங்கி, எச்சிஎல் டெக்னாலஜி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஆசியன் பெயிண்ட் ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.


Edited by Siva

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments