பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை படு வீழ்ச்சி அடைந்த நிலையில் நேற்று ஒரு நாள் மற்றும் சுமார் 400 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சற்றுமுன் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 325 புள்ளிகள் சார்ந்து 59 ஆயிரத்து 85 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை 85 புள்ளிகள் சார்ந்து 17363 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.
இன்னும் சில நாட்களுக்கு பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என பங்குச்சந்தர் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.