Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.4000 குறைந்த தங்கம்.. ரூ.50,000க்கு கீழ் வருமா?

Siva
வியாழன், 25 ஜூலை 2024 (09:47 IST)
தங்கம் விலை கடந்த 18ஆம் தேதி 55 ஆயிரத்துக்கும் அதிகமாக ஒரு சவரன் விலை இருந்த நிலையில் தற்போது 51,440 என்று விற்பனை ஆகும் நிலையில் ஒரே வாரத்தில் சுமார் 4000 ரூபாய் தங்கம் ஒரு சவரனுக்கு விலை குறைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி குறைப்பு காரணமாக தங்கம் விலை குறைகிறது என்றும் இன்னும் தங்கம் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் 50,000க்கும் கீழ் வரும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ரூபாய்   6,430 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 480 குறைந்து  ரூபாய் 51,440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.52,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,885 எனவும் ஒரு சவரன் ரூபாய் 55,080 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 89.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 89,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆவின் கிரீன் மேஜிக் என்ற பெயரில் விலை அதிகரிப்பா? அன்புமணி கண்டனம்..!

ஒரே நேரத்தில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

உட்கார்ந்து பதில் சொன்னதால் வழக்கு: 10 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை..!

மகள்களை மீட்டுத் தரக்கோரி தந்தையின் ஆட்கொணர்வு மனு.. ஈஷா தரப்பு வாதம்..!

அக்டோபர் 22ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னைக்கு பாதிப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments